கன்னட திரையுலக நடிகர் தர்ஷன்…ஜாமின் வழங்க எதிர்ப்பு…!!!

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை.அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, தர்ஷனுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!