ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கன்னி ராசிக்கு…! காரிய தடைகள் இருந்தாலும் சரி ஆகிவிடும்…! மாற்றங்களை விரும்பக் கூடியவர்களாக இருப்பீர்கள்…!! Rugaiya beevi17 December 202405 views கன்னி ராசி அன்பர்களே…! தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வரும். தொழில் விரிவாக்கம் இருக்கும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். முயற்சிகள் கண்டிப்பாக திரு வினை ஆக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும் சூழல் இருக்கு. கூடுதல் பொறுப்புகள் இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி இருக்கும். சாமர்த்தியமான செயலால் மதிப்பும் அந்தஸ்து உயரும். மனக்கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெண்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுங்கள். உற்சாகமாக எதையும் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு கையில் காசு பணம் புழங்கும். காதல் கண்டிப்பாக மாற்றத்தை கொடுக்கும். காதலில் வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.