ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கன்னி ராசிக்கு…! தொடர்ந்து போராடுங்கள் வெற்றி உங்கள் பக்கம்…! பிடித்தமான வேலையை செய்து மகிழ்வீர்கள்…!! Rugaiya beevi30 October 202404 views கன்னி ராசி அன்பர்களே…! உங்களுடைய கஷ்டங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிறரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பண வரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி கண்டிப்பாக வரும். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சூடு பிடிக்கும். மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீணான பிரச்சனைகளுக்கு செல்ல வேண்டாம். வராமல் நின்ற பணம் கண்டிப்பாக வரும். சில முக்கிய முடிவுகளை மிக தெளிவாக எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் வெற்றியை கொடுக்கும். பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்கள் நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெற முடியும். காதல் ஒருபோதும் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக பணிகளில் மேற்கொள்வீர்கள். விளையாட்டுத்துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.