கன்னி ராசி அன்பர்களே…! மன தைரியத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.
போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று இருங்கள். எல்லா வகையிலும் நல்லது நடக்கும். பொறுமையாக செயல்படுங்கள் மற்றபடி பிரச்சினை இல்லை. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பண வரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நல ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சரக்குகளை அனுப்பும்பொழுது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் விலகும். பெண்கள் குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ செய்து கொடுப்பீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதலைப் பொறுத்தவரை யோசித்து தெளிவான சிந்தனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்று எண்ணம் இருக்கும். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கூடும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.