கன்னி ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள்.
செய்யும் செயல்களில் நிதானமாக செய்ய வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாபம் சீரான முறையில் கிடைக்கும். பெரிய அளவு பிரச்சினைகள் இருந்தாலும் பார்த்து பக்குவமாக அணுக வேண்டும். அக்கம் பக்கத்தில் பேசும்பொழுது கவனம் வேண்டும். நண்பர்களிடம் கேட்ட உதவி தாமதமாக கிடைக்கும். பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராக இருக்கும். உபரி பண்ண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அரசியல்வாதிகள் நல்ல பெயர் கிடைக்கும். சுயமரியாதை கூடும். சுறுசுறுப்பு மேலோங்கும். எதிர்பார்த்த நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். சிந்தனை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் ஈடுபடுவது நல்லது. உத்தியோகணிபத்தமாக பயணம் சென்று வருவீர்கள். சங்கடங்களை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகி செல்லும். கருத்து வேற்றுமை ஏற்பட்டது சரியாகும். மனம் இறுக்கமாக இருந்தது கண்டிப்பாக மாறும். நல்லவைகள் நடக்கும் நாளாக இருக்கும். மட்டற்ற மகிழ்ச்சி கண்டிப்பாக கூடும். பெண்களின் ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். இந்த நாளை இனிமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய கவலை சரியாகும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் . மாணவர்கள் எதிலும் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கல்வியில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் நீளம் நிறம்.