Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…!! காதல் கண்டிப்பாக ஜெயிக்கும்…!! தேக நலனில் அக்கறை உண்டாகும்…!!

கன்னி ராசிக்கு…!! காதல் கண்டிப்பாக ஜெயிக்கும்…!! தேக நலனில் அக்கறை உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…!! கட்டுக்கோப்பாக பேசுவது நல்லது.

பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது மிக நல்லது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். விருத்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும். இடமாற்றத்தால் இனிய மாற்றம் வரும். வரவும் செலவும் சமமாக இருக்கும். தேக நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய வழிகாட்டுதலுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணத்தால் பிரியமானவர்களை சந்திப்பீர்கள். உங்களுடைய திறமையின் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பிரச்சனைகள் தீரும். பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். இனிய கனவுகள் வரும் சூழல் உண்டாகும். தைரியமாக வெற்றி நடை போடுவீர்கள். உங்களுடைய வேலை வாய்ப்பை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்வீர்கள். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் பிரச்சனை இருக்கும். காரமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். தொலைபேசி வழி மூலம் பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் அமைதி நிலை நாட்ட வேண்டும். கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது கவனம் வேண்டும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். புதுவிதமான எண்ணம் தோன்றும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பெண்கள் காரியங்களை முன்பின் அறிந்து செய்வது நல்லது. அக்கம் பக்கத்தில் பேசும்பொழுது கவனம் வேண்டும். காதலைப் பொறுத்தவரை சிந்தித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும்.

காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் நம்பிக்கை கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கண்டிப்பாக துணிவு ஏற்படும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் வெளிப்படும். மாணவர்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.