கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை…பாஜக எம்.பி அருண்குமார் சாகர்…!!!

முன்னாள் பிரதமர்களான பி .வி நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங் , முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வாணி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முதல் மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய ஐந்து பேருக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது. இந்த நிலையில் பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் போது உத்திரபிரதேச தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி அருண்குமார் சாகர் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் தலித்துக்கள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழவும், சொந்த காலில் நிற்கவும் காரணமானவர் கன்ஷி ராம் எனக் கூறியுள்ளார். எனவே இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கூறினார். ஏற்கனவே இவருக்கு பாரத ரத்னா விருந்து வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!