சினிமா செய்திகள் தமிழ் சினிமா கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!! Sowmiya Balu20 September 20240117 views இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதில் இவர் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், சிம்பு மற்றும் பல நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் 149.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் மே மாதம் இந்த திரைப்படம் ரிலீசாகும் எனவும் அப்டேட் வெளியாகியுள்ளது.