சினிமா செய்திகள் தமிழ் சினிமா கமல் நடிக்கும் “தக் லைஃப்”… அசத்தலான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு… என்னன்னு தெரியுமா…? Sowmiya Balu30 July 2024069 views இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதில் இவர் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், சிம்பு மற்றும் பல நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் கமல் தனது டப்பிங் பணியை தொடங்கி இருப்பதாக பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.