செய்திகள் மாநில செய்திகள் கருக்கலைப்பினால் ஏற்ப்பட்ட விபரீதம்…பெண் பலி..!!! Sathya Deva23 July 2024086 views மகாராஷ்டிரா மாநிலம் பூனாயில் கணவனை பிரிந்து காதலனுடன் வாழும் 25 வயது பெண். அவர் கர்ப்பமடைந்த நிலையில் கருவை கலைக்க மும்பை அருகே உள்ள தானே மருத்துவமனைக்கு காதலன் அழைத்து சென்றார். இந்த கருக்கலைப்பின் போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து பெண்ணின் உடல் அவரது காதலரிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரை விட்டு பிரிந்து காதலருடன் வாழும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு குழந்தையும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர் கடந்த 9ம் தேதி தனது நண்பனுடன் பெண்ணின் உடலை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பூனா நோக்கி காதலன் வந்துள்ளார்.அவர் வரும் வழியில் காதலன் அவர் நண்பனுடன் சேர்ந்து இந்திரயாணி ஆற்றில் பெண்ணின் உடலை வீசுகிறார். அழுது கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் அவர் ஆற்றில் தள்ளிவிட்டு ஊர் திரும்பினார் என்று கூறப்படுகிறது. தனது பெண்ணை காணவில்லை என்று தாய் அளித்த புகாரின் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார் காணாமல் போன இரண்டு குழந்தைகளை தேடி வருகின்றனர்.