செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் கரை ஒதுங்கிய இரண்டு குழந்தைகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!! Inza Dev12 July 2024088 views விழுப்புரம் மரக்காணம் அருகே மீனவர் பகுதியை சேர்ந்த ஆனந்த வேலு என்பவரது நான்கு வயது குழந்தை ஜோவிதா மற்றும் 18 மாத குழந்தை சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளனர். ஆனந்த வேலுவின் மனைவி கௌசல்யாவை பாலியல் வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் குழந்தைகளை கடலில் வீசி கொன்று விட்டு ஆனந்த வேலு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குழந்தைகளை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.