செய்திகள் மாநில செய்திகள் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு…பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!! Sathya Deva31 July 2024074 views கர்நாடக அணைகளில் இருந்து காவேரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காவேரி கரையோர தாழ்வான பகுதிகளின் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபடுகிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது எனவும் கூறப்படுகிறது. காலை 1 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1.40 லட்சம் அதிகரித்து உள்ளது.