Home செய்திகள் கர்நாடக அரசு…தொழில் தொடங்க மாதம் 25000 உதவி தொகை…!!!

கர்நாடக அரசு…தொழில் தொடங்க மாதம் 25000 உதவி தொகை…!!!

by Sathya Deva
0 comment

கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான விஷியம் என கூறியுள்ளார். அதுவும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.

புதிய தொழில் தொடங்குவதால் பலர் பொருளாதார சிக்கல்களின் மாட்டிக்கொள்கின்றார்கள். எனவே அவர்களின் சுமையை குறைக்க இந்த மாதாந்திர உதவித் தொகை பயன்படும் என்று கூறியுள்ளார். இதனால் தொழில் தொடங்குபவர் அன்றாட செலவுகளை பற்றி யோசிக்காமல் தொழிலே வளர்ப்பதில் கவனம் செலுத்துவர் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகே எந்த அளவு வெற்றி பெறும் என்பதை பார்க்க முடியும் எனக் கூறியுள்ளார். இந்த உதவி தொகை தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தொழில் சார்ந்த அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அரசு வழங்கும் என்று இதில் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.