செய்திகள் மாநில செய்திகள் கர்நாடக மாநிலம்….ரவுடி ஷீட்டர் முத்துராஜ் கைது…!!! Sathya Deva12 August 2024078 views கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிக்முலகுடு பகுதியை சேர்நதவர் ஷீட்டர் முத்துராஜ் என்கிற டக்கா. இவர் மீது 3 கொலைகள், 3 கொலை முயற்சி, 2 கொள்ளை வழக்குகள் உள்பட 11-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் எந்த வழக்கிலும் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்ய ஹலகுரு பகுதியை சேர்ந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் போலீசாருடன் சென்றார். அப்போது ரவுடி ஷீட்டர் முத்துராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர் போலீசாரை மீண்டும் தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி ஷீட்டர் முத்துராஜை காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் அடைந்த அவரை மாண்டியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.