செய்திகள் மாநில செய்திகள் கல்லூரி பாடத்திட்டம்…. ஆர்.எஸ்.எஸ். புத்தகங்கள் கட்டாயம்…!!! Sathya Deva13 August 20240102 views 2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில்,பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்கி அதைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பரிந்துரைக்கப்பட்ட அந்த 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அடங்கும். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதியில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். இதைத்தவிர்த்து மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் குறித்து விலகிச் சொல்ல, அனைத்து கல்லூரிகளிலும், பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா செல்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துயுள்ளார்.