கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும்… 6 பெண்கள் பலி… குஷ்பூ ஆதங்கம்…!! Revathy Anish26 June 2024082 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அதன்படி தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினரான குஷ்பூ கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்களும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இதற்குரிய காரணத்தை அறிந்து இந்த நிலையை மாற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.