செய்திகள் மாநில செய்திகள் கார்கில் 25வது நினைவு தினம்… பிரதமர் மோடி பயணம்…!! Sathya Deva26 July 20240108 views இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25 ஆவது நினைவு நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை காலை 9 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் கார்கில் போர் நினைவு இடத்திற்கு செல்கிறார். அங்கு கடமையின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரதம மோடி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கமாக கொண்டிருப்பார். இந்த கார்கில் போர் முடிந்து 25 ஆண்டுகள் என்பதால் பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவார் எனக் கூறப்படுகிறது. மேலும் ஷின்குன் லா சுரங்க பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் 4.1 கிலோமீட்டர் நீளமுள்ள ரெட்டை குழாய் சுரங்க பாதை கொண்டது என கூறப்படுகிறது. இந்த சுரங்க பாதை கட்டிப்முடிக்கப்பட்டால் உலகின் மிக உயரமான சுரங்க பாதையாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.