காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளிலும் பனிப்பாறைகள் பொலிவிழந்து வருகின்றன. இந்நிலையில் இதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக டங்கன் போர்ட்டர் என்ற பயனர் தனது இணையதளத்தின் 15 வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு பெண்ணுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள ட்ரோன் பனிப்பாறையில் முன்பு நின்று கொண்டு எடுத்த புகைப்படம் உள்ளது.
அதில் பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன .மேலும் 2-வது புகைப்படத்தில் அவர் தற்போது அதே பனிப்பாறையின் முன்பு நின்று எடுத்த புகைப்படம் உள்ளது. அதில் பனிப்பாறைகள் பொலிவிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.