உலக செய்திகள் செய்திகள் காலி பணியிடங்கள் வெறும் 600… விண்ணப்பித்தவர்களோ 25000… திணறிய விமான நிறுவனம்…!! Sathya Deva17 July 2024090 views நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. குறைந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் நிலைமை உருவாகிறது. மும்பையில் அந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மும்பை ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தில் பொருட்களை ஏற்றி , இறக்குதல், பேக்கேஜ் பெல்ட்டுகள் இயக்குதல் ஒவ்வொரு விமானத்திற்கும் பொருட்கள், சரக்கு ,உணவு போன்றவற்றை கையாள ஆட்கள் வேண்டும் என்று 600 காலி பணியிடங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்காக விண்ணப்பிக்க 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலுவலகத்தின் முன் குவிந்ததால் அதிகாரிகள் திணறினர். பின்பு அனைவரின் சுய விவரங்கள் அடங்கிய ரெஸ்யூம்கள் வாங்கிக் கொண்டு நேர்முக தேர்வுக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிக்கு உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.