பெங்களூர் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை பார்வையிட முதல்வர் டி .கே. சிவகுமார் அவர்கள் புறப்பட்டு உள்ளார். அப்போது அவர் கூறியதாவது காவேரியில் இருந்து தினமும் 51 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுவரை 30 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு தந்துள்ளதாவும் மேலும் பத்து டிஎம்சி தண்ணீரை கொடுக்க தயாராக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். காவிரி நதி படுகையில் உள்ள 1,657 ஏரிகளையும் நிரப்பிக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அவர் கிருஷ்ணராஜ சாகர் அணையை பார்வையிட்ட பிறகு ஜூலை 11 முதல் 31 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 20 டிஎம்சி தண்ணீர் விடுவிக்கப்படும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு வழிகாட்டுதல் வழங்கி இருக்கிறது எனக் கூறியுள்ளார். முன்னதாக அணையில் போதுமான நீர் இல்லாத நிலையில் தமிழகத்தில் தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும் எடுத்துரைத்தார். மேலும் மேதாது அணை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அதற்கு காலம் தான் பதில் அளிக்கும் என்றும் இது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று அவர் கூறினார்.