கியாரா அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு… அசத்தலான போஸ்டரை வெளியிட்ட “கேம் சேஞ்சர்” படக்குழு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து தற்போது இயக்கியவரும் திரைப்படம் ”கேம் சேஞ்சர்”. இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு கேம் சேஞ்சர் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?