கிரீஸ் நாட்டில் மத்திய பகுதியில் உள்ள துறைமுக நகரமான வோலோஸ் [Volos] நகரத்தில் உள்ள கடற்கரை மற்றும் நீர் நிலைகளிலிருந்து மீன்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து மிதப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு ஒரு மாத காலத்துக்கு அவசர நிலை அறிவிக்கும் அளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது.சுமார் 100 டன்களுக்கும் அதிகமான மீன்கள் உயிரிழந்து மிதக்கின்றன. காலநிலை மாற்றம் காரணிகளால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான மீன்களின் உயிரிழப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அழுகிய மீன்களால் உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.உயிரிழந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கி குமிந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.