Home செய்திகள் குஜராத் மாநிலத்தில் கனமழை…தண்ணீரில் மூழ்கிய 50 லட்சம் கார்…!!!

குஜராத் மாநிலத்தில் கனமழை…தண்ணீரில் மூழ்கிய 50 லட்சம் கார்…!!!

by Sathya Deva
0 comment

குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர். மழை தொடர்பான விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 30 வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக மூன்று கார்கள் நீரில் மூழ்கியதில் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், மாருதி சுஸுகி சியாஸ், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ரூ. 50 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் ஆடி ஏ6 ஆகியவை ஒரே இரவில் பெய்த கனமழையால் சேதமடைந்ததாகதெரிவித்துள்ளார். “இனி வாழ்வதற்கு எதுவுமில்லை… என்னிடம் இருந்த 3 கார்களும் இப்போது போய்விட்டன” என்று அவர் தலைப்பிட்டு கார்கள் தண்ணீரில் மூழ்கிய படங்களை பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.