குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபர்… வைரல் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் மது போதையில் தண்டவாளத்தில் ஒரு நபர் இருந்ததைக் கண்டு ரெயில் ஓட்டுனர்அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்டவாளத்தில் ஆய்வு செய்தபோது, நபர் ஒருவர் படுத்திருந்தது தெரிந்தது. அருகில் சென்ற பார்த்தபோது அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.https://twitter.com/i/status/1821535153199444061

பின்னர், அந்த நபரை எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தபோது அவர் குடிபோதையில் இருப்பதும், தண்டவாளம் என்றுக்கூட தெரியாமல் படுத்து உறங்கியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இருப்பினும், அவர் மேல் ரெயில் ஒன்று கடந்து சென்றும் அந்த நபருக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த நபர் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!