லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ராகுல்-அனிதா. இதில் மனைவி அனிதா நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டி விட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டிருந்தார். இதனால் இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைக்கு பின் தன் கணவனின் கொடூரமான செயல்களை குறித்து பேசி உள்ளார். அப்போது கணவன் ராகுல் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.