உலக செய்திகள் செய்திகள் குரோஷியா நாட்டில் முதியவர் இல்லதில் துப்பாக்கி சூடு….6 பேர் பலி…!!! Sathya Deva23 July 20240101 views குரோஷியா நாட்டில் தாருவார் நகரின் முதியவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியின் நுழைந்த நபர் அங்கு இருந்தவர்களை சுட்டார். இதில் 5 பேர் பலியானார் .மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவரின் தாய் அந்த முதியோர் இல்லத்தில் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார் என்பது தெரிய வருகிறது. அந்த நபர் தனது தாயே சுட்டுக் கொன்றுள்ளார். தாக்குதலுக்காக காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது . அந்நாட்டு பிரதமர் ஆ ண்ட்ரேஜ் பிளென் கோவிச் கூறும்போது முதியோர் இல்லத்தில் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இது ஒரு கொடூரமான செயல் என்றும் இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.