குழந்தைகள் விரும்பும் தேங்காய் பிஸ்கட்…. வீட்டிலேயே செய்யலாமே….!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 200 கிராம்

வெண்ணிலா சுகர் பவுடர் – 1 தேக்கரண்டி

சர்க்கரை – 100 கிராம்

வெண்ணெய் – 100 கிராம்

வறுத்த தேங்காய் துருவல் – 50 கிராம்

பாதாம் பருப்பு தூள் – 20 கிராம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் 50 கிராம் வறுத்த தேங்காய் துருவலோடு 20 கிராம் பாதாம் பருப்பு தூள், 100 கிராம் உருக்கிய வெண்ணெய்,
    200 கிராம் மைதா மாவு,100 கிராம் சர்க்கரை, ஒரு தேக்கரண்டி வெண்ணிலா சுகர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து‌ சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • அதனை ஒரு பாலித்தீன் பையில் போட்டு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • அரை மணி நேரத்திற்கு பின் அதனை சப்பாத்தி போல் தேய்த்து தாங்கள் விரும்பும் வடிவங்களில் வெட்டி அதை எண்ணெய் தடவிய ஒரு மெல்லிசான ட்ரெயில் இடைவெளி விட்டு வைத்து கொள்ளவும்.
  • 200 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சூப்பரான சுவையான தேங்காய் பிஸ்கட் ரெடி.

Related posts

நாவல் பழ சீசன் வந்திருச்சு!!! நாவல் பழத்தின் நன்மைகள்!!!

தித்திக்கும் சுவையில் அசோக அல்வா…. செய்து அசத்துங்க….!!

குழைந்தைகள் விருப்ப பட்டியலில் ஃபிஷ் ஆம்லெட்… நீங்களும் செஞ்சி அசத்துங்க…!!