குவைத் நாட்டில் எல்லா எதிர்பார்ப்புகளுடனும் தம்பதியர்கள் திருமணம் செய்து கொண்டனர். அப்போது திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு புறப்பட தயாராகும்போது மணமகள் கால் தவறி கீழே விழுந்தார். அதனைப் பார்த்த மணமகன் “பார்த்து நடக்க தெரியாதா முட்டாள்” என்று திட்டிவிட்டார். இதனால் மணப்பெண் மணமுடைந்தார். காலமெல்லாம் இவருடன் எப்படி வாழ போகிறோம் என்று நினைத்து வேதனை பட்டார்.
இந்நிலையில் அவர் உடனே நீதிமன்றத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தங்களை பிரித்து வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். உடனே நீதிமன்றமும் அவரது கோரிக்கையை ஏற்று திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கியது. அந்த நாட்டில் நடந்த மிகக் குறுகலான குடும்ப பந்தம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. அதில் ஒரு பயனர் “மரியாதை அற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்து விடும்” என்று தெரிவித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம் 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.