கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலம் அடித்து செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளன. மேலும் 500 வீடுகளில் உள்ள சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் சார்பில் உதவி செய்வதற்காக கேரளாவிற்கு ரூபாய் 5 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உத்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் கேரளாவில் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது. அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் எர்ணாகுளம் உள்ளிட்டு நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மீட்பு பணிக்காக உடனே 5000 கோடி ரூபாயை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளாவில் சேர்ந்த பல்வேறு கட்சி எம்பிகள் மேல்சபையில் பேசி வருகின்றனர். கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் 700 பேர் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் கேரளாவில் பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.