Home செய்திகள் கேரளாவில் நிலச்சரிவு…தொடரும் மீட்புப்பணி…!!!

கேரளாவில் நிலச்சரிவு…தொடரும் மீட்புப்பணி…!!!

by Sathya Deva
0 comment

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பயங்கர நிலை சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூழல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலைச்சிரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் முண்டகையில் பெய்த கனமழையால் பாலம் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலச்சரிவில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை உயிரிழந்தவரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வயநாடு சூழல்மலை ஆற்றின் நடுவே இரவிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. இந்த மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.