கேரளா கூட்டுறவு வங்கி…நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்தது…!!!

கேரள மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கி நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வங்கி கிளையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தக் கிளையில் நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், உடைமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரள முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கிற்கு ரூபாய் 50 லட்சத்தை கேரள வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது. மேலும் வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஐந்து நாள் ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். ஆனால் இந்த வங்கியில் கடன் வைத்திருப்போர் விவரம் என்னும் வெளியாகவில்லை இருப்பினும் இந்த அறிவிப்பின் மூலம் கூடுதலான மக்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!