கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக பல்வேறு குடும்பங்கள் மண்ணில் புதைந்து போயினர். இந்த நிலச்ரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில் வயநாடு நிலச்ரிவில் மன்சூர் என்ற நபர் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து தவித்து வருகிறார் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த 16 பேரின் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என கூறப்படுகிறது.
அதில் தாய், மனைவி, தங்கை, மகனின் உடல்கள் மட்டும் தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மீதி 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டபோது மன்சூர் வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் இந்த நிலச்சரிவு என் ஒட்டுமொத்த உலகத்தையும் அடித்து சென்று விட்டது. என்னுடைய குடும்பம் என்னுடைய வீடு உள்ளிட்ட அனைத்தும் என்னை விட்டு சென்று விட்டது என்று தன் குடும்பத்தை இழந்து தவித்து வரும் மன்சூர் பெரும் சோகத்தோடு தெரிவித்துள்ளார்.