செய்திகள் மாநில செய்திகள் கேரளா மாநிலம்…காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்….போலீசார் தடியடி…!!! Sathya Deva5 September 20240170 views கேரளாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுயேட்சை எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டினார். இவரது புகாரைத் தொடர்ந்து கேரளாவில் முதல்மைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, கேரள தலைமை செயலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். இவர்களை தடுக்கும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது.