செய்திகள் மாநில செய்திகள் கேரளா மாநிலம் நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து EMI பிடிப்பு…!!! Sathya Deva19 August 20240104 views கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில் பேசிய அவர், “நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.