கேரளா மாநில நிலச்சரிவு…. தேசிய பேரிடராக அறிவிக்க வலியறுத்தல்…

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுகையில் வயல் நாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு என்றும் காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லி காஜுனர் கார்கே பேசுகையில் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கின்றது. நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

இங்கு மீட்பு பணிகள் குறித்த தகவலை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலச்சரிவை பற்றி பல்வேறு கேரளாவை சேர்ந்த எம்பிக்கள் பேசிய போது வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் எனவும் 500 குடும்பங்கள் தவிர்த்து வருகின்றனர் இதற்கு ரூபாய் ஐந்தாயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் நிலைமையை கேட்டு அறிந்தார். அவர் கேரளா விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!