செய்திகள் மாநில செய்திகள் கேரள நடிகைகள் பரபரப்பு குற்றச்சாட்டு…7 பேர் கொண்ட குழு அமைக்க முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு…!!! Sathya Deva25 August 2024077 views கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் நடவடிக்கை நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.