செய்திகள் மாநில செய்திகள் கேரள மாநிலத்தில் கனமழை….பல இடங்களுக்கு எச்சரிக்கை…!!! Sathya Deva28 July 20240122 views கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் வருகின்ற 30ஆம் தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .இதன் காரணமாக இன்று கோழிக்கோடு ,கண்ணூர் ,காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வயநாடு ,கண்ணூர்,காசர்கோடு மாவட்டங்களுக்கும் நாளை மறுதினம் கோழிக்கோடு கண்ணூர் காசார் கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் . மேலும் மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்திவு கடல் பகுதிகளில் மீனவர்கள் கடவுளுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியா வானிலை மையம் கூறியுள்ளது.