கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயிரும் என சொல்லப்படுகிறது. மத்திய அரசு வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நிலச்சரிவு தொடர்பான பிரச்சனையை பற்றி ராகுல்காந்தி அவர்கள் இன்று மக்களவையில் பேசி உள்ளார்.
கேரளா வயல் நாட்டில் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது என்றும் இழப்பீடு தொகையை உயர்த்தி கொடுக்கவும் மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் பேரிடர் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு விரைவான செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புகளை மீட்டு எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.