கேரள மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் நிஃபா வைரஸுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானார். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியே சேர்ந்த அந்த சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தார் எனக் கூறப்படுகிறது.
மேலும் அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்களை போலீசார் பட்டியல் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தார் எனும் 330 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 406 பேர் சுகாதாரத் துறையின் கண் காணிப்பில் உள்ளதாகவும் அவர்களில் 139 பேர் சுகாதார பணியாளர்கள் உட்பட 194 பேர் ஆபத்து உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டவர்களாகவும் மாநில சுகாதார மந்திரி விணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிஃபா வைரஸ்க்கு 21 பேர் பலியாகி உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பரவலை அடுத்து கேரள மாநிலத்தை சுற்றியுள்ள தமிழக எல்லை பகுதியிலும் கண்காணிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.