Home செய்திகள் கேரள மாநிலத்தில்…460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு….!!!

கேரள மாநிலத்தில்…460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு….!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினதிட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரளா மீன் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்த மாநிலத்தில் 460 பகுதிகளின் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஆய்வின்படி 32 இடங்களில் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும் 76 இடங்களில் 20 சதவீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வயல்நாட்டில் வைத்திரி, தொண்டர்நாடு பொழுதானா, திருநெல்லி, வெள்ளமுண்டா, தரியோடு, முப்பைநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடுக்கியில் கொக்கையார், மறையூர் உள்ளிட்ட 20 இடங்களிலும் மலப்புரம் அமரம்பலம், கருளை, சோக்காடு, கருவரக்குண்டு உள்ளீட்டு இடங்களிலும் பாலக்காட்டில் மூன்று இடங்களிலும் பத்தினம்திட்டா மாவட்டத்தின் அருவாப்புலம், சித்தாத்கோடு, சித்தார் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.