செய்திகள் மாநில செய்திகள் கேரள மாநிலம் நிலச்சரிவு…பள்ளத்தாக்கில் தேடும் பணி தீவிரம்…!!! Sathya Deva6 August 2024030 views கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை கிராமங்களும் உருக்குலைந்தன எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், மற்றும் வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலச்சரிவினால் பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்ட நிலையில் ஏராளமானவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மீட்பு பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் என பல பேர் ஈடுபட்டுள்ளனர், இந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 400 எனக் கூறப்படுகிறது, இதில் இன்னும் 200 பேரை காணவில்லை என்று மீட்பு துறையினர் கூறுகின்றனர், அவர்களை ராடர்கள், ட்ரோன், ஹெலிகாப்டர்கள் போன்றவை மூலம் கண்டுபிடிக்க மீட்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இன்று மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பள்ளத்தாக்கு பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது சூச்சிப் பாறை மற்றும் பொதுக்கல்லு என்ற பகுதிகளுக்கு இடையில் தான் அந்த பள்ளத்தாக்கு இருக்கிறது. எனவே அங்கு ராணுவ வீரர்கள் 12 பேர் ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து செல்லப்பட்டு தேடுதல் பணி மேற்கொள்கின்றனர்.