செய்திகள் மாநில செய்திகள் கேரள மாநிலம் நிலச்சரிவு …பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு…!!! Sathya Deva10 August 2024039 views கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். இதனால் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். பிரதமர் மோடியுடன் கேரளா ஆளுநர் மற்றும் கேரள முதல்வரும் மத்திய அமைச்சர் சுரேஷ்கோப்பியும் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அவர்கள் சூரல்மழை, வெள்ளிமலை, முண்டகை மற்றும் பெய்லி பாலத்தை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி அவர்கள் மேம்பாடு தனியார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பிரனாயி விஜயன் நிலைமையை எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.