கேரள மாநிலம் நிலச்சரிவு…31 உடல்கள் அரசால் அடக்கம்…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி கொட்டி தீர்த்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அடையாளம் காணப்படாத 31 உடல்கள் 158 உடல் பாகங்களும் புதுமலையில் உள்ள 64 சென்ட் இடத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இறந்து 22 மணி நேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை புதைக்க சட்டம் இருந்தாலும் இறுதி சடங்குகளுக்கு முன்னதாகவே உறவினர்கள் அடையாளம் கண்டு கொண்டு செல்ல அரசு அவகாசம் அளித்திருக்கிறது. அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் டி.என்.ஏ.வும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் அரசால் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!