செய்திகள் மாநில செய்திகள் கேரள மாநிலம் நிலச்சரிவு…நீத்து என்ற பெண் பலி…!!! Sathya Deva1 August 20240177 views கேரள மாநிலம் வயல் நாட்டின் கடந்த 29ஆம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு மேற்பட்டது. அதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். இதில் ஏராளமானவர் குடும்பமாக வீட்டுக்குள்ளே சிக்கிக் கொண்டனர் என கூறப்படுகிறது. வயநாடு மேம்பாடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய நீத்து என்ற பெண் தன் வேலை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தகவலை தெரிவித்து இருக்கிறார். அப்போது அவர் நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவுவில் சிக்கி உள்ளேன் எனது வீட்டை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தயவு செய்து எங்களை காப்பாற்ற யாராவது அனுப்புங்கள் என்று கதறி உள்ளார். இதை எடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடும் மழையும் பொறுப்படுத்தாமல் அவர் வீடு இருந்த பகுதிக்கு சென்று உள்ளனர். ஆனால் அவர் வீடு இருந்த பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. இதனால் நீத்து வீடு இருந்த பகுதிக்கு ஆஸ்பத்திரி ஊழியர்களால் செல்ல முடியவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் நீத்து இருந்த அவரது சமையலறை வெள்ளத்தில் செல்லப்பட்டார் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக நீத்துவின் கணவர் அவரது மகன் மற்றும் பெற்றோர் வீட்டில் மற்றொரு அறையில் இருந்திருக்கின்றன அவர்கள் உயிர் தப்பி உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவு சிக்கி மண்ணுக்குள் புதைந்து ஏராளமான ஊயிர் பலியாகியுள்ளனர் என கூறப்படுகிறது.