இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கைதி. 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில் கார்த்தி யார் அவருக்கும் வில்லன் அடைக்கலத்திற்கும் என்ன பகை என கேள்வி எழுந்தது. இதற்கான பதில் கைதி 2 படத்தில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த படங்கள் இயக்குவதில் பிஸியாக இருப்பதால் கைதி 2 படம் தள்ளி போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கைதி 2 படம் குறித்து சூப்பரான அப்டேட் நடிகர் கார்த்தி கூறியுள்ளார். அதன்படி, தற்போது மெய்யழகன் மற்றும் வா வாத்தியாரே படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. சர்தார் 2மற்றும் கைதி 2 தான் அடுத்து நடிக்க போகும் திரைப்படங்கள். மீண்டும் பிரியாணி பக்கட்டை கையில் எடுக்க நேரம் வந்து விட்டதாக ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியான அப்டேட்டை கொடுத்துள்ளார்.