சினிமா செய்திகள் தமிழ் சினிமா கையில் ருத்ராட்ச மாலையுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்… வைரலாகும் வீடியோ பதிவு…!!! Sowmiya Balu29 July 2024080 views நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இதனைத் தொடர்ந்து நேற்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இவர் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இவர் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் தனது இரண்டு மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.