இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பொருள்களை வாங்குவது வழக்கமாகிவிட்டது .அந்த வகையில் செப்டோ நிறுவனம் மிகவும் பிரபலம் அடைந்த ஒன்று. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செப்டோ செயலில் கொத்தமல்லியின் விலை 100 கிராம் 100 ரூபாய் என விற்கப்பட்டது. இதனைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து அரியானா மாநிலம் குருகிராமை நகரத்தை சேர்ந்த நபர் கடந்த எட்டாம் தேதி 100 கிராம் கொத்தமல்லி 131 ரூபாய்க்கு விற்கப்படுவதை அறிந்து அதனை தனது போனில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். மேலும் அவர் உள்நாட்டிலேயே பெறப்பட்ட பிரீமியம் நறுமணக் கொத்தமல்லி 131 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மேலும் உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவும் வகையில் “உள்ளூர் வியாபாரியிடமிருந்து இருந்து பொருட்களை வாங்குவோம் அவர்கள் வளர உதவி செய்வோம்” என அவர் அந்த பதிவில் தெரிவித்தார்.