கொல்கத்தாவில் பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி….கார் கொண்டு பைக் மீது இடித்ததால் பரபரப்பு…!!!

கொல்கத்தாவில் சதர்ன் அவென்யூ பகுதியில் உள்ள சாலையில் பிரபல பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த வழியாக வந்த பைக் மீது லேசாக பாயல் இடித்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பைக் ஓட்டுநர் நடிகை அமர்ந்திருந்த காரை கண்மூடித்தனமாக தாக்கி கார் கண்ணாடியை உடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ளே இருந்த பெங்காலி நடிகை பாயல் உடனே ஃபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்ய தொடங்கினார். பின்பு இந்த கலவரத்தினால் காருக்குள் அமர்ந்திருந்த அந்த நடிகை யாராவது உதவிக்கு வரும்படி கூச்சலிட்டு உள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பைக் ஓட்டுனரை கைது செய்தனர். இந்நிலையில் தன்னை தர குறைவாக பேசி மிரட்டியதாக பைக் ஓட்டுனர் மீது நடிகை பாயல் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து கார் ஓட்டி வந்து தனது பைக்கை இடித்ததாக கூறி பாயல் மீது பைக் ஓட்டுனர் குற்றம் சாட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!