இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ”கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்திற்கு முதலில் ‘கோட்’ என பெயர் வைப்பதற்கு பதிலாக ”காந்”தி என பெயர் வைக்க இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அந்த காந்தி என்ற தலைப்பு கிடைக்காத காரணத்தினால் இந்த படத்திற்கு ”கோட்” என பெயர் வைக்கலாம் என தோன்றியதாக கூறியுள்ளார்.