“கோட்” பட டிரைலர் அறிவிப்பில் தாமதம்…அசத்தலான புதிய போஸ்டர் ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்திதெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இந்த படத்தின் டிரைலர் தேதி இன்று வெளியாகும் என்பதை உறுதி அளிக்கிறேன். நீங்கள் சிறந்த பகுதியை பார்க்க வேண்டும் என நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். தளபதியை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காக புதிய போஸ்டர் என அசத்தலான போஸ்டர் ஒன்றை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!